என்னுள் ஆயிரம் – விமர்சனம்

தூங்கி கொண்டிருக்கும் நாயகி மரினா மைக்கல் தீடிரென விழித்து கொண்டு “அப்பா.. நான் காதலிப்பவருடன் வீட்டை விட்டு செல்கிறேன்.. என்னை தேட வேண்டாம்.. இன்னும் இரண்டு வருடம் கழித்து ஒரு குழந்தையுடன் நான் வரும்போது என்னை ஏற்றுகொள்வீர்கள்” என கடிதம் எழுதி வைத்து விட்டு நாயகி கிளம்ப தயாராகிறாள் என படம் தொடங்குகிறது.

பின்னர் போலீஸ் ஒருவர் அவன் போட்டோ இதான் சார் இருக்கு இதையே யூஸ் பண்ணிகோங்கோ என ஒரு பத்திரிகையாளரிடம் கொடுக்கிறார். வேணும்னா அவன் வேலை பார்த்த ஓட்டல் சென்று விசாரித்து விட்டு வேறு தருகிறேன் எனும் போதே…

ஓட்டலில் நாயகன் மகா இருக்கும் சீன்கள் ஓட… அடுத்த சீனில்.. இன்னொரு நாயகி சுருதியுகல்.. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு சென்ற கணவனை நினைத்து காம சுகத்திற்கு ஏங்கி வேதனை கொள்ள…

படம் பார்க்கும் நமக்கோ “ஆஹா இதுவரைக்கும் என்ன போகுதுன்னே புரியலையே.. இவங்க இந்த உலகத்துக்கு வேற ஏதோ சொல்ல வராங்க எனும் நினைக்கும் போது..”

ஒரு நாள் இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் மகா, அதே போல் வீட்டுக்கு செல்ல வரும் சுருதியுகல் இருவரும் மழைக்காக ஓரமாக ஒதுங்க, ஒரு மின்னல் இருவரையும் ஒரு கை சேர இணைக்கிறது. பின்னர் அடுத்த பத்து நிமிடங்கள் அவர்கள் காமத்தில் இணைய துடிப்பதை விளக்குகிறது படம்..

அதற்கு பின்னர் மகாவும் மரினாவும் காதலிக்கும் காட்சிகள் படம் முழுக்க நிரம்பி.. அவர்கள் காதல் கை கூடியதா இல்லையா என்பது மீதமுள்ள சுமார் படம்..

கணவனை பிரிந்து வாழும் சுருதி ஒரு வேகத்தில் தப்பு பண்ணிவிட்டோமே என அவர் வீட்டை மாற்றி விட்டு மரினாவின் வீட்டு மாடியில் குடி வருகிறார் எனும் போதே கதை வேறுகோணத்தில் பயணம் ஆகி விடுகிறது.. ஆனால் இயக்குனர் திடிரென இந்த பக்கம் போக தேவை இல்லை நாம வேற பக்கம் போகாலாம் என சுருதியை ஒரு கார் விபத்தில் பலி கொடுக்கிறார்.. இது படத்தின் முதல் சறுக்கல்..

தெரியாமல் செய்த கொலையால் மன நிம்மதி இழந்து பாவ மனிப்பு கேட்க செல்லும் மகா இன்னொரு கொலையை செய்வது இன்னொரு சறுக்கல்..

தெரியாமல் செய்த கொலையால், எங்கே தான் ஜெயிலுக்கு செல்ல நேர்ந்தால் தன் காதலியின் வாழ்கை கேட்டு விடுமோ என பயப்படும் மகா மற்றுமொரு கொலையும் செய்து விட்டு காதலி மரினாவை ஓடிவரும்படி சொல்வது இன்னொரு முரண்..

டெல்லி கணேசின் மகன் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.. முதல் நாயகி மரினா மைக்கல் பார்பதற்கு சுமாராகவும் இரண்டாம் நாயகி சுருதியுகல் சூப்பர் ஆகவும் இருக்காங்க.. நடிப்பிலும் அப்படியே..

பாடல்கள் அனைத்தும் ஓகே ரகம். அறிமுக இயக்குனர் கிருஷ்ண குமார் கதை தேர்விலும் அதை சரியான முறையில் சொல்லும் விதத்திலும் கோட்டை விடுவதால் மற்றவர்களின் திறமையும் வீணாகிறது.கடைசியில் என்னுள் ஆயிரம் என்பது மரினாவின் மனசிலா? இல்லை மகாவின் மனசிலா? என்பது எத்தனை பேருக்கு விளங்கும் என்பது சந்தேகமே..

மொத்தத்தில் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை உங்களுள் யோசித்து விட்டு படத்திற்கு செல்லுமாறு உங்களை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்..

Rating: 2/5