சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் படம் ” அட்ரா மச்சான் விசிலு “. இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து சென்சாருக்கு அனுப்பும் நடைமுறைகள் நடந்து வருகின்றன.
இந்த படத்தை தயாரிக்கும் அரசு பிலிம்ஸ் நிறுவனம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், கில்டிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்சாருக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்தோடு சேர்த்து படத்தின் தலைப்பை உறுதிப்படுத்தும் வகையில் சங்கத்தின் கடிதமும் இணைக்க வேண்டும். இதனால் கடிதம் வேண்டி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்கப்பட்டது.
ஒரே நாளில் கடிதம் கொடுத்து விடுவது தான் சங்கத்தில் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆனால் என்ன காரணத்தாலோ இந்த படத்திற்கு கடிதம் வழங்காமல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இழுத்து வருகிறது.
இந்த படத்தை வெளியிட விடாமல் பெரிய நடிகர் ஒருவர் தடுப்பதாகவும், அவருக்கு உடைந்தையாக சங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திங்கட்கிழமைக்குள் தங்களுக்கு கடிதம் கிடைக்காவிட்டால் படக்குழுவினரோடு சென்று தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் இருப்பது என தயாரிப்பாளர் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.