இசையால் அறிமுகமாகி அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து பின் நடிகராக அறிமுகமாகி அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்து தான் பங்குபெற்ற அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டவர் நடிகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஜீ.வி.பிரகாஷ்குமார்.
டார்லிங் 2, திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் என தொடர் வெற்றி படங்களை அளித்து முன்னனி நட்சத்திரமாக விளங்கும் ஜீ.வி.பிரகாஷ்குமார் தற்போது முன்னனி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்கனர்களின் அபிமான கதாநாயகனாக திகழ்கிறார் என்றால் மிகையாகாது.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புருஷ் லீ, ராஜேஷ் இயக்கத்தில் கடவுள் இருக்கான் குமாரு, ஷங்கர் – குணா இயக்கத்தில் கெட்ட பையன் சார் இந்த கார்த்தி, சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் புதிய படம், சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம், ஸ்ரீ கீரின் புரோடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம், ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பல எதிர்பார்ப்பைக்கூட்டும் படங்களில் நடிக்கின்றார்.
புதுமக இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள் புதிய தயாரிப்பு நிறுவனம் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் என அனைவரின் கவனமும் ஈர்க்கும் ஜீ.வி.பிரகாஷ்குமாரை தமிழ் திரையுலகம் “நம்பிக்கை நாயகன்” என்ற செல்லப்பெயர் வைத்து செல்லமாக அழைக்கிறது.
மக்களால் தங்களது பெயரை முன்றெமுத்தாக சுறுக்கி அழைக்கபெற்று பெரும் வெற்றி பெற்ற நடிகர்கள் எம்.ஜீ.ஆர், என்.டி.ஆர், எஸ்.டி.ஆர் வரிசையில் தற்போது ஜீ.வி.பியும் இணைந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
எம்.ஜீ.ஆர் – சரோஜாதேவி, சிவாஜி – பத்மினி, ரஜீனி – ஸ்ரீ பிரியா, கமல் – ஸ்ரீ தேவி, விஜய் – சிம்ரன், அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா என மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட வசூல் சாதனை ஜோடிகள் வரிசையில் தற்போது ஜீ.வி.பி – ஆனந்தி ஜோடி இணைந்துள்ளது. இவர்கள் நடித்து வசூலில் சாதனை படைத்த திரிஷா இல்லனா நயன்தாராவை தொடர்ந்து விரைவில் வெளிவரவிருக்கும் எனக்கு இன்னோரு பேர் இருக்கு படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் மாதம் 17 அன்று உலகமேங்கும் கோலாகலமாக லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான “எனக்கு இன்னோரு பேர் இருக்கு” திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.