அவ்வப்போது வெளியான இரண்டு புகைப்படங்களை வைத்து, தனக்கு விக்னேஷ் சிவனிடம் உள்ள காதலை வெளியுலகுக்கு சொல்லாமல் சொன்னார் நயன்தாரா.. அதற்கேற்ற மாதிரி அவரது டைரக்சனில் ஒரு படமு நடித்து அந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தினார்.. அந்தப்படம் வெளியானபின் ரோம் நகரில் அவர்கள் இருக்கும் புகைப்படம் கூட வெளியானது..
இந்த சூழலில் சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற சைமா விருது வழங்கும் விழாவுக்கு ஜோடியாக வந்தார்கள்.. ஜோடியாகவே விழா அரங்கத்தில் அமர்ந்தார்கள்.. ஜோடியாகவே கிளம்பி போனார்கள்… அதுமட்டுமல்ல, இரண்டு பேருக்குமே சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் என்கிற விருதும் கிடைத்தது.
ஆனால் விருது வாங்கும்போது நயன்தாரா மேடையில் நடந்துகொண்டது தான் பலரையும் முகம் சுழிக்கவைத்து விட்டது.. குறிப்பாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை… காரணம் நயன்தாராவுக்கான விருதை வழங்க அழைக்கப்பட்டவர் அவர் தான். அனால் நயந்தாராவோ, இந்த விருதை விக்னேஷ் சிவன் கையால் கொடுத்தால் நன்றாக இருக்கும் என அறிவித்து தனது காதலர் கையாலேயே விருதை பெறும் கொண்டார். இதன்மூலம் தனது காதலை இன்னும் பகிரங்கப்படுத்தியுள்ளார் நயன்தாரா..