தமிழ், மலையாளம் என எந்த மொழிகளில் நடித்தாலும் அந்தப்படத்தின் புரமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார். இதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்.. ஆனால் திரையுலகில் அவருக்கு சமமாக வலம் வரும் த்ரிஷா ஓரளவுக்கு அவரது படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
ஆனால் சமீப காலமாக, தான் நடித்த படங்கள் என்றாலும் கூட பெரிய இயக்குனர், பெரிய நடிகர் என்றால் புரமோஷன் நிகழ்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். த்ரிஷாவை கதாநாயகியாக வைத்து ‘நாயகி’ என்கிற படம் தயாராகி இருக்கிறது..
ஹீரோ என்கிற பெயரளவுக்கு கணேஷ் வெங்கட் ராம் இருந்தாலும், முழுப்படமே த்ரிஷாவை நம்பித்தான் பயணிக்கிறது… ஆக படம் தியேட்டர்களுக்கு வரும் வரை த்ரிஷாவின் சப்போர்ட் கட்டாயம் தேவை என படக்குழுவினர் விரும்புகின்றனர்.. ஆனால் படத்தில் ஈடுபாட்டுடன் நடித்த த்ரிஷாவோ புரமோஷனுக்கு வரமாட்டேன் என டிமிக்கி கொடுக்கிறாராம்.. ஒருவேளை நாய்களுக்கான ஆதரவு கூட்டம் நடத்தினால் மட்டும் தான் வருவாரோ என்னவோ..?