முத்தின கத்திரிக்காய்க்கு டேஸ்ட் அதிகமோ..? ; சிம்புவின் அடடா செலக்சன்..!


சிம்பு தனது நடவடிக்கைகளால் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நிற்பவர்.. வித்தியாசப்படுத்தி கொண்ண்டவர்.. வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே எதையாவது பண்ணிக்கொண்டே இருப்பார். அதில் ஒன்றுதான் ஜோதிகா, நயன்தாரா, ரீமா சென் என தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் ஜோடியாக நடித்தார்.

இப்போது அந்தப்பட்டியலில் நடிகை ஸ்ரேயாவையும் இணைத்துக்கொண்டு விட்டார் சிம்பு.. ஆம்.. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்சனில் சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் ஸ்ரேயா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பே தனுஷுடன் ஜோடியாக நடித்துவிட்ட ஸ்ரேயாவுக்கு, அதைவிட இந்தியில் டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்து அம்மா நடிகை லிஸ்ட்டில் சேர்ந்துவிட்ட ஸ்ரேயாவுக்கு, இப்போதுதான் சிம்புவுக்கு ஜோடிசேரும் யோகம் வந்துள்ளது.