நடிகர் சங்க பொறுப்புகளுக்கு வந்தபின் நாசர், விஷால் இருவரும் சங்க விவகாரங்களில் சுணக்கமின்றி நடந்துகொள்கிறார்கள் தான். பல திட்டங்களை தயார்படுத்திக்கொண்டும் இருக்கிறார்கள் தான். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அவர்கள் இருவரும் துணை நடிகர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் நடந்துகொண்ட முறை தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது சங்கத்தை சேர்ந்த செயலாளர் மீது துணை நடிகர் அஜென்ட் ஒருவர் புகார் கூறினாராம். அதைக்கேட்ட விஷால், எங்கள் ஆள் மீது நீ புகார் சொல்லாதே என சொன்னாராம். அதற்கு அவர் உங்கள் ஆள் என்றால் உங்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த நாங்கள் எல்லாம் யார் என்று பதிலுக்கு கேட்டாராம்.
உடனே அருகே இருந்த நாசர், நாங்களும் நீங்களும் ஒன்றா..? எங்களைப்போல உங்களால் நடிக்க முடியுமா..? கூட்டத்தோடு கூட்டமாக வந்துபோகும் உங்களுக்கு என்ன வீராப்பு வேண்டிக்கிடக்கு என ஏகத்தாளமாக பதில் கூறியதாக தெரிகிறது..
பிரச்சனை பெரிதாகி இருதரப்பு உறுப்பினர்களுக்கும் அடிதடி உருவாகும் போல சூழ்நிலை உருவாக்க, அங்கிருந்த மற்றவர்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி விளக்கிவிட்டனராம்.