நயன்தாரா சினிமாவுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகியும் நடிகர் விக்ரமுடன் ஜோடி சேராமல் இருந்தார். இது மிகப்பெரிய குறையாக பேசவும் பட்டது.. அதற்கு பல காரணங்களும் சொல்லப்பட்டது. அதில் ஒன்றுதான் நயன்தாரா இனி விக்ரமுடன் எப்போதும் நடிக்கமாட்டார் என்பது.. ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக தற்போது ‘இருமுகன்’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து வருகிறார்..
இந்தப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் ரொமான்ஸ் காட்சிகளில் வெகுவாக தாராளம் காட்டியிருக்கிறாராம் நயன்தாரா. அவரது காதலர் விக்னேஷ் சிவனே இந்தப்படத்தை பார்த்தால் நயன்தாராவிடம் கோபம் கொள்வார் என்றும் படக்குழுவினர் பேசிக்கொள்கிறார்களாம்… ஒருகாலாத்தில் ஒட்டவே மாட்டேன் என்று சொன்னவர், இப்போது ஒட்டி உரசி நடிக்கும் மாயம் தான் என்ன..? மர்மமே உன் இன்னொரு பெயர் தான் நயன்தாராவோ..?