இந்த அஜித் ரசிகர்கள் பண்ற அட்டகாசம் இருக்கே.. அடேங்கப்பா.. சில நாட்களுக்கு முன்னால் அமிதாப் பச்சன் அஜித் படத்தை தயாரிக்க போகிறதாக ஒரு தகவல் வெளியானது.. எந்த புண்ணியவான் கிளப்பிவிட்டானோ தெரியாது.. ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் அஜித்தை வைத்து அவர் ‘உல்லாசம்’ என்கிற படத்தை தயாரித்ததால் இந்த செய்தி உண்மையாக இருக்கலாம் என்றும் கூட சொல்லப்பட்டது..
இதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்த அஜித் ரசிகர் ஒருவர், நேராக அமிதாப் பச்சன் ட்விட்டர் பக்கத்திற்கு சென்று, “எங்க தல படத்தை தயாரிக்கிறீர்களா’” என கெத்தாக கேட்டுள்ளார்.. அதற்கு அவர் ‘இல்லை’ என பதில் இட்டுள்ளார்.
அதுசரி.. அஜித் ரசிகனுக்குத்தான் அவர் தல.. ஆனால் அமிதாப் பச்சனுக்கு ‘தல’யும் தெரியாது.. ‘வாலு’ம் தெரியாது.. அதனால் அவர் தெரிந்து பதில் சொனாரா இல்லையா என்பதும் கூட தெரியாது. இப்படி அஜித் ரசிகர் ஒருவர் அமிதாப்பிடம் பல்ப் வாங்கியதை விஜய் ரசிகர் பார்த்துவிட்டு ‘செம கலாய்.. செம கலாய்’ என தனது ஆட்களுடன் கலாய்க்க ஆரம்பிக்க, பதிலுக்கு அஜித் ரசிகர்களும் திருப்பி தாக்க…இவர்களிடமிருந்து நம்மை,
காக்க காக்க கனகவேல் காக்க.. வேறென்ன சொல்வது.