கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஜய்க்கு அனுமதி மறுப்பு..!


விஜய்யை வைத்து அழகிய தமிழ் மகன் படதை இயக்கிய பரதன் மீண்டும் அவரை வைத்து ‘எங்க வீட்டு பிள்ளை’ (இன்னும் டைட்டில் உறுதியாகவில்லை) என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்துவிட்டது.. இந்தப்படத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சில காட்சிகளை படமாக்க வேண்டி இருந்ததாம். ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருதி இங்கே படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லையாம். இதனால் ஸ்டுடியோ ஒன்றிலேயே கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு செட் போட்டு படப்பிடிப்பை நடத்துவதாக சொல்லப்படுகிறது.