ரீமேக் படங்களாக இயக்குவதில் ஜெயம் ராஜாவுக்கு சரியான டப் கொடுத்து வந்தவர் தான் இயக்குனர் மித்ரன் ஜவஹர். தனுஷ் படங்களைத்தான் இயக்குவாரோ என நினைக்கத்தூண்டும் வகையில் வரிசையாக தனுஷ் நடித்த ரீமேக் படங்களாக இயக்கிய இவர் இந்தமுறை வால்டர் என்கிற அறிமுக கதாநாயகனை வைத்து ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் தயாரிப்பாளர் தான் கதாநாயகனின் தந்தையும் கூட. அதுமட்டுமல்ல கலைப்புலி தாணுவுக்கு நெருக்கமானவர். இந்தப்படத்தின் ஹீரோ வால்டர் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என தாணுவிட சொன்னபோது கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கதைகளை இவருக்காக அனுப்பி வைத்தராம்.
ஆனால் எதிலும் திருப்தி வராமல் மலையாளத்தில் ஹிட்டான ‘தட்டத்தின் மறயத்து’ படத்தையே ரீமேக் செய்து ஹீரோவாக நடிக்கிறேன் என சொல்லிவிட்டாராம். அப்போது தாணு இதுநாள் வரை எத்தனையோ ஹீரோக்களுக்கு கதை சிபாரிசு பண்ணியிருக்கிறேன்.. ஆனால் உனக்குத்தான் 20 கதைகளுக்கு மேல் அனுப்பி வைத்திருக்கிறேன்.. என்னை கிறங்கடித்து விட்டாய்” என்று சொன்னாராம்..
இந்தப்படத்தை கலைப்புலி தாணு தனது பேனரிலேயே ரிலீஸ் பண்ணுகிறார். அதனால் தான் இந்த வாரம் வெளியாக இருந்த இந்தப்படம், ‘கபாலி’ இன்னும் நிறைய அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் காரணத்தால் வரும் ஆக-12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.