“எல்லோருக்கும் டிக்கெட் போடுங்க” ; தயாரிப்பாளருக்கு காஜல் அகர்வால் தந்த டார்ச்சர்..!


தல-57 படத்தில் அஜித்துடன் நடித்துவருகிறார் காஜல் அகர்வால். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்லோவேனியா என்கிற நாட்டில் நடைபெற்று வருகிறதாம். இந்தப்படப்பிடிப்பு ஸ்தலத்தையே தனது குடும்ப டூருக்கான இடமாக மாற்ற முடிவு செய்த காஜல் அதற்காக செய்த அடாவடிதான் படத்தின் தயாரிப்பாளர் தரப்பை மிரள வைத்துவிட்டதாம்.

தன்னுடன் உதவியாளராக தனது தாயும் வருகிறார் என்று சொன்ன காஜல், பிறகு தனது தந்தைக்கும் டிக்கெட் புக் பண்ண சொன்னாராம். தயாரிப்பாளர் தரப்பில் கேட்டதற்கு, அவர்தான் என் மேனேஜர் அந்தவிதமாக அவருக்கும் டிக்கெட் போடுங்கள் என்றாராம்..

வேறு வழியில்லாமல் அவருக்கும் ஒரு டிக்கெட் போட்டபின், அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தாராம் காஜல். இரண்டு படங்களில் நடித்ததோடு அடுத்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டில் அடைந்துகிடக்கும் அவரது தங்கை இஷா அகர்வாலுக்கும் சேர்த்து இன்னொரு திக்கெட்டும் போட சொன்னாராம்.

இது தயாரிப்பாளர் தரப்பை ரொம்பவே டென்ஷன் ஆக்கினாலும், அவர்களது கோபத்தை வெளிக்காட்ட முடியுமா என்ன..? அவருக்கும் டிக்கெட்டை போட்டு தொலைத்தார்களாம். அதுசரி கோடிகளில் பணத்தை கொட்டி படம் எடுக்கும், நடிகைகளுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் இரண்டு டிக்கெட்டுகளை அதிகமாக போடுவதால் ஏற்படும் சில லட்ச இழப்புகளை பெரிதுபடுத்துவது ஏன்..?

அதேபோல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் அதில் சில லட்சங்களை தானே செலவு செய்து தந்து குடும்பத்தாரை அழைத்து செல்வதில் என்ன குறைந்து விடப்போகிறது. கஞ்சத்தனமும் பிசுனாரித்தனமும் போட்டிபோடும் இடம் இதுதான்.