உதவி இயக்குனருக்கு டைட்டில் கார்டு போட மறுத்த ‘ஒருநாள் கூத்து இயக்குனர்’..!


சினிமாவில் வேலை பார்ப்பவர்களிலேயே பாவப்பட்ட ஜென்மங்கள் என்றால் அது உதவி இயக்குனர்கள் தான்.. இருப்பதிலேயே குறைவான சம்பளமும், அதிகப்படியான ஓய்வு ஒழிச்சல் பார்க்காத வேலையும் இவர்களுக்குத்தான்.. எல்லாம் எதற்காக..? டைட்டில் கார்டில் இடம்பெற போகும் தங்களது பெயருக்காக… நமக்கும் ஒருநாள் இயக்குனர் வாய்ப்பு கிடைப்பதற்கு நாம் வேலைபார்க்கும் படம் தான் விசிடிங் கார்டு என்பதால் தான் அத்தனை சோதனைகளையும் பொறுத்துக்கொள்கின்றனர்.

ஆனால் அப்படிப்பட்ட உதவி இயக்குனர் ஒருவருக்கு ‘ஒருநாள் கூத்து’ என்கிற ஒரே படத்தை மட்டுமே இயக்கியுள்ள நெல்சன் வெங்கடேசன் என்கிற இயக்குனர் டைட்டிலில் அவரது பெயரை உதவி இயக்குனராக சேர்க்காமல் அடாவடி பண்ணியது என்ன நியாயம் என குமுறுகிறார் அவரைவிட்டு வெளியேறிய உதவி இயக்குனர் ஒருவர்..

இவர் ஒன்றும் பத்து படம் இயக்கவில்லையே. இவரும் உதவி இயக்குனராக இருந்து இப்போது தானே இயக்குனராக மாறியுள்ளார். இவருக்கு உதவி இயக்குனரின் வலி தெரியாமல் போனதெப்படி என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி வருகிறாராம் அந்த உதவி இயக்குனர்.