மேலிடத்து உத்தரவால் தான் பல்டி அடித்தாரா வரலட்சுமி..?


ஆடு பகை.. ஆனால் குட்டி உறவு என்கிற பழமொழியை நிஜத்தில் மெய்ப்பித்து வருபவர் நடிகை வரலட்சுமி. இவரது தந்தை சரத்குமாரும் இவரது நண்பர் (!) விஷாலும் சண்டைக்கோழிகளாக சிலிர்த்துக்கொண்டு மல்லுக்கு நின்ற விஷயம் நாடறியும்.. ஆனால் அது வேறு, இது வேறு என விஷாலுடன் நட்பில் நெருக்கம் காட்டிவந்தார் வரலட்சுமி.

இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்கிற அளவுக்கு செய்திகள் உச்சநிலையில் இருந்து வருகின்றன. இருவரும் பல விழாக்களில் ஜோடியாக இணைந்தே வலம் வந்தார்கள். இதற்கும் ஒரு படி மேலாக விஷால் ஒருநாள் தங்கள் இருவரின் புகைப்படத்தையும் போட்டு, இந்தப்படமே பல கதைகள் சொல்லும் என்கிற ரேஞ்சிற்கு பில்டப் ஏற்றினார்.

ஆனால் சில தினங்களுக்கு முன் வரலட்சுமி திடீரென தனது கல்யாணம் இப்போதைக்கு இல்லை.. இன்னும் நிறைய சாதிக்கவேண்டி இருக்கிறது என ஒரு ஸ்டேட்மென்ட்டை வான்டட் ஆக கொடுத்தார். இதற்கு பின்னணியில் சரத்குமார், ஆளும் கட்சி தலைமையிடம் விஷால் வரலட்சுமி நட்பு குறித்து தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும், அதனால் மேலிடத்தில் இருந்து வரலட்சுமிக்கு அக்கறையுடன் கூடிய எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாகவும் அதனால் தான் இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்டை அவர் விடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.