முதன்முறையாக தம்பியுடன் மோத தயாராகும் அண்ணன்..!


இதுநாள் வரை அண்ணன் தம்பியான சூர்யா-கார்த்தியின் படங்கள் ஒரே நாளிலேயோ அல்லது, ஒன்றின் வசூலை, அல்லது ஓட்டத்தை பாதிக்கும் வகையில் அருகருகில் உள்ள தேதிகளிலோ வெளியானதே இல்லை. ஆனால் வரும் தீபாவளி பண்டிகையில் ஒரே நாளில் அண்ணன் தம்பி இருவரின் படங்களும் முதன்முறையாக மோதுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் S3’ மற்றும் கார்த்தி நடித்து வரும் காஷ்மோரா ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நாளில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். கார்த்தி படம் தீபாவளிக்கு ரிலீஸாவது ஏற்கனவே முடிவு செய்யப்பட ஒன்று.. ஆனால் சூர்யா படம் அதற்கு முன்போ, அல்லது பின்னரோ தான் ரிலீசாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்போது ஒரேநாளில் ரிலீஸாக இருகிறது என்றால் இடையில் நடந்தது என்னவாக இருக்கும் என இரண்டு பேரின் ரசிகர்களும் தலையை பிய்த்துக்கொள்ளத்தான் போகிறார்கள்..