கலைப்புலி தாணுவுக்கு எதிராக களமிறங்கும் விஷால்..!


நடிகர்சங்க தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம்.. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்காய் குற்றங்களை சுமத்திக்கொண்டிருந்த சமயத்தில், நடுநிலை வகிக்க வேண்டிய தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, தன்னிச்சையாக முடிவெடுத்து சரத்குமார் அணியை ஆதரிப்பதாக அறிவித்தார்.

அதுவரை சீனுக்குள்ளேயே வராத அவர், விஷால் அன் கோவின் எதிரியாக மாறியது அந்த தருணம் தான்.. தான் தயாரித்த சில படங்களின் பட வெளியீட்டின்போதும், திருட்டு விசிடி பிரச்சனையின்போதும் தனக்கு உதவ மறுத்த கலைபுலி தாணு மீது ஏற்கனவே சன்னமான கோபத்தில் இருந்த விஷால், நடிகர் சங்க தேர்தலில் வென்றவுடன் தாணுவுக்கு செக் வைக்க முடிவு செய்தார்..

சொன்ன மாதிரியே நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்த விஷால், தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிரான கருத்துக்களை கூறிவந்தார். இந்தநிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தான் போட்டியிடுவதாக இப்போது அறிவித்தும் விட்டார். இந்த விஷயத்தில் தனக்கு ஆதரவாக நடிகர்களாக இருந்தும், இயக்குனர்களாக இருந்தும் தயாரிப்பாளர்களாக மாறியவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ள இருக்கிறாராம் விஷால்.