‘ஐ ஆம் வெய்ட்டிங்” ; விஜய்சேதுபதி அழைப்புக்காக காத்திருக்கும் ‘கங்காரு’ நாயகி..!


திருமண வீட்டாரின் விருப்பப்படி அனைத்தையும் அவர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ‘மை கிராண்ட் வெட்டிங்’ என்கிற செயலியை (App) ஆர்.சரத் என்பவர் உருவாக்கியுள்ளார்.. ‘கங்காரு’, ‘வந்தா மல’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நாயகி ஸ்ரீஜா, இந்த செயலியை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று அறிமுகப்படுத்தினார்.

இந்த ‘மை கிராண்ட் வெட்டிங்’ செயலியை அறிமுகப்படுத்திய நடிகை ஸ்ரீஜாவிடம் அவரது திருமணம் எப்போது என கேட்டபோது, “இன்னும் திரையுலகில் நான் சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறது.. அதனால் இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கு இடமில்லை.. ஆனால் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் இந்த மை கிராண்ட் வெட்டிங் எனக்கு ரொம்பவே கைகொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்..

தமிழ் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு அமைவதில்லை என விஜய்சேதுபதி அமர்ந்திருந்த ஒரு மேடையிலே சில மாதங்களுக்கு முன் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் ஸ்ரீஜா. இப்போது வாய்ப்புகள் ஏதும் தேடி வந்துள்ளதா என கேட்டதற்கு, அந்த நிகழ்விற்கு பிறகு விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள்.., உரிய வாய்ப்புகள் வரும்போது அழைப்பதாகவும் ஊக்கப்படுத்தியுள்ளனர். நீங்கள் இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து கேட்கிறீர்கள் அல்லவா.? அதனாலேயே நான் ஒரு நல்ல இடத்திற்கு நிச்சயம் வருவேன் என நம்புகிறேன்..” என்றார் ஸ்ரீஜா.