மோகன்லாலை இருட்டடிப்பு செய்து சத்யராஜை ஹீரோவாக்கி வெளியாகும் ‘முருகவேல்’!


மலையாளத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்த ‘லைலா ஓ லைலா’ படம் தான் தற்போது தமிழில் ‘முருகவேல்’ என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.. இவர்களை இருவரையும் முன்னிறுத்தி தான் ‘முருகவேல்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது..

ஆனால் இந்தப்படத்தின் கதாநாயகன் மோகன்லால் என்பதையே இருட்டடிப்பு செய்துவிட்டார்கள் என்பதுதான் திகைக்க வைக்கிறது.. இன்றைய சூழலில் மோகன்லாலின் படங்கள் தமிழ்நாட்டில் எப்போதுமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. அப்படி இருக்கையில் மோகன்லாலை விட சத்யராஜையும் அமலாபாலையும் வைத்து எந்த தைரியத்தில் விளம்பரம் பண்ணுகிறார்கள் என்றுதான் நமக்கு புரியவில்லை.