லட்சுமி ராமகிருஷ்ணனின் பிரஷரை எகிறவைக்கும் ஊர்வசி..!


லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியினை கிண்டல் செய்து விஜய் டிவியில் ஒரு காமெடி நிகழ்ச்சி நடத்தினாலும் நடத்தினார்கள். அதன்பின் “என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..”, “போலீஸைக் கூப்பிடுவேன்” என்று இணையத்தில் பலரும் கிண்டல் செய்யும் அளவிற்கு, அந்த வசனங்கள் பிரபலமானது. சொல்லப்போனால் இப்படிப்பட்ட கிண்டலுக்குப் பிறகு அவரது நிகழ்ச்சி இன்னும் பிரபலமாகிவிட்டது என்றுகூட சொல்லலாம்..

சினிமாவில் இந்த வசனத்தை பல நடிகர்களும் பலவிதமாக கின்டல செய்து அதை தங்களது படங்களின் பப்ளிசிட்டிக்கு பயன்படுத்திக்கொண்டார்கள். இப்படி ஒவ்வொரு தடவை நடக்கும்போதும் லட்சுமி ராமகிருஷ்ணன் பொங்கி எழுந்து குமுறுவதும், தன்னை கலாய்த்தவர்களை திட்டித்தீர்ப்பதும் வாடிக்கையாக நடந்துவந்தது.

இப்போது லட்சுமி ராமகிருஷ்ணனை கலாய்த்திருப்பது நடிகை ஊர்வசியின் முறை.. அதாவது அவரை கலாய்க்க வைத்திருப்பது இயக்குனர் எம்.ராஜேஷ்.. அவர் இயக்கியுள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ‘பேசுவதெல்லாம் உண்மை’ என்கிற நிகழ்ச்சியை உருவாக்கி, அதை கோமதி கோபாலகிருஷ்ணன் என்கிற பெயரில் நடத்துவதாகவும், அதை ‘Y’ சேனல் ஒளிபரப்புவதாகவும் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற வரும் எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் தங்களுக்குள் அடித்துக்கொள்வது போலவும் படமாக்கி இருக்கிறார்கள்..

இதை நேற்று டீசராகவும் வெளியிட்டுள்ளார்கள். ஆக, லட்சுமி ராம்கிருஷணனின் பிரஷர் எகிறப்போவது நிச்சயம்..