சென்னை-28 படத்தில் பல நடிகர்கள் நடித்துள்ளர்களே, இதில் யார் இந்த முடிவை எடுத்துள்ளார் என குழம்பவேண்டாம்.. இந்தப்படத்தின் மூலம் ஹீரோக்கள் லெவலுக்கு ரீச்சானவர்கள் ஜெய்யும் மிர்ச்சி சிவாவும் தான். இவர்கள் இருவருக்கும் தான் அதிகமாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.
ஆனால் ஜெய்யால் எந்த இயக்குனருக்கும், தயாரிப்பாளாருக்கும் நாணயமாக நடந்துகொண்டு நல்லபடியாக படங்களில் நடித்துக்கொடுக்க முடியவில்லை.. அதனால் இன்னொரு சிம்புவாகவே அவர் மாறிப்போனார்.. தனது படம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கே கூட அவர் வர மறுப்பதால், இனி அவர் நடிக்கும் படங்கள் அதிகம் வருமா என்பதும், அவரது திரையுல எதிர்காலம் என்ன என்பதும் கேள்விக்குறிதான்..
இன்னொரு பக்கம் மிர்ச்சி சிவா இந்த மாதிரி தகராறுகள் பண்ணாத நல்ல மனிதர் தான். ஆனால் அனைத்து படங்களிலும் அவரால் ஒரேமாதிரியான நடிப்பையும் மேனரிசங்களையும் மட்டுமே வெளிப்படுத்த முடிகிறது. அதனால் அவருக்கான பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது. காமெடியை மட்டுமே வைத்துக்கொண்டு அவரால் தொடர்ந்து நடிப்பு வண்டியை ஓட்ட முடியவில்லை..
அதனால் தனது குருநாதர் வெங்கட் பிரபு காட்டிய பாதையில் டைரக்சன் ரூட்டில் அடியெடுத்து வைக்கப்போகிறார் சிவா. அவர் இயக்கும் முதல் படத்தை வெங்கட் பிரபுவே தயாரிக்கப்போகிறார்.. ஆக, சிவா ஒரு நல்ல இயக்குனராக ஜொலிப்பார் என நம்பலாம்.