விஜய் ஆண்டனியையும் விட்டுவைக்கவில்லை ரஜினி ஸ்டைல்..!


தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துவருகிறார் விஜய் ஆண்டனி.. ஆனால் எந்த ஒரு நடிகருக்கும் ஆரம்பகாலத்தில் ரஜினியின் சாயலை கொஞ்சமாவது பிரதிபலிக்காமல் நடிக்கமுடியாது.. ஆனால் விஜய் ஆண்டனியோ இதுவரை நடிப்பில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்தும் வருகிறார். ஆனால் இப்போது வெளியான ‘சைத்தான்’ டீசரை பார்க்கும்போது இவரையும் ரஜினியின் தாக்கம் விட்டுவைக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

இந்த டீசரின் ஆரம்பத்தில் ‘கபாலி’ ஸ்டைலில் விஜய் ஆண்டனியின் கால்கள் மட்டும் நடந்து வருவது தெரிவதும், படையப்பா ஸ்டைலில் ஷூ நம் முகத்துக்குநேரே தெரியும்படி காலை தூக்கி இன்னொரு கால் மேல் ஸ்டைலாக போடுவதுமாக சில இடங்களில் ரஜினி ஸ்டைலை பாலோ பண்ணியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

போகட்டும்.. சூப்பர்ஸ்டார் போல பஞ்ச் டயலாக் எதுவும் பேசாம இருந்தா சரிதான்.