தயாரிப்பாளர் சங்கம் ஒருதலை பட்சமாக நடந்து வருவதாக அவ்வபோது தான் பேசும் மேடைகளில் குற்றம் சாட்டி வருகிறார் விஷால். அதனால் தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி அவதூறாக பேசினார் என விஷால் மீது நீதிமன்றத்தில் தயாரிப்பளார் சங்கம் சார்பில் வழக்கு பதியப்பட்டு இருந்தது..
இதற்கு பதில் அளிக்கும் வகையில் விஷால் தரப்பு வக்கீல், தயாரிப்பாளர் சங்கத்த்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசவில்லை என்றும், எப்படி பேசவேண்டும், நடந்துகொள்ளவேண்டும் என உங்கள் ஆட்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அதில், தாங்கள் இந்த வழக்கை சட்டரீதியாக சந்தித்து வெல்வோம் என்றும், இதற்காக தங்களுக்கு ஆன செலவுத்தொகையை தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்தே வசூலிப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது