சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் விஜய் டிவி வரிசையென்றால், சஞ்சய் சன் டிவி வரிசை. விஜேவாக இருந்து ‘மியாவ்’ படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகிறார்.
முதல்பட அனுபவம்?
செம ஜாலியா இருந்துச்சு. படத்துக்கு ஆடிஷன் வெச்சாங்க. மூணாவது ரவுண்ட்ல தான் செலக்ட் ஆனேன். எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னு தான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். முடிச்சுட்டு செஃப்பா வேலை பார்த்துட்டு இருந்தப்ப நடிக்க சான்ஸ் கேட்டு ஒவ்வொரு ஆபிஸா ஏறி இறங்கினேன். நான்கு ஆண்டுகள் அப்படியே போனது. எந்த வழியில உள்ளே போறதுனு தெரியாம சேனல்ல ட்ரை பண்ணலாம்னு அந்த முயற்சிகள்ல ஈடுபட்டேன். சன் டிவி ஆடிஷன்ல கலந்துகிட்டேன். அதுலயும் 14 வது முறை தான் செலக்ட் ஆனேன். இன்னும் மூன்று முறை போயிருந்தா கஜினி முஹமதுவாகியிருப்பேன். அந்த விஜேங்கற அடையாளம் தான் எனக்கு இந்த பட சான்ஸ் கொடுத்தது.
பூனையை வெச்சு படமா?
ஸ்பாட்டுக்கு போன பின்னாடிதான் இந்த படம் பூனையை வெச்சுங்கறதே தெரிஞ்சுச்சு. ஆனா என் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கானதுங்கறதால எந்த சந்தேகமும் இல்லை. பூனை கூட நடிச்சது சவாலான விஷயம். நிறைய மைம் ஸீன்ஸ் இருந்துச்சு. பூனையே இருக்காது. கிராபிக்ஸுக்காக பூனை இருக்கறதா கற்பனை பண்ணிட்டு நடிக்கணும். உண்மையான பூனை கூட நடிக்கிறதும் கஷ்டம் தான். அந்த பூனை நல்லா பயிற்சி கொடுக்கப்பட்ட பூனைங்கறதால எந்த பிரச்னையும் இல்லை.
நான்கு ஹீரோக்கள்ல ஒருவரா?
முதல்ல சொல்லும்போதே நான்கு பேருக்குமே சமமான கேரக்டர்னு சொல்லிட்டாங்க. எங்க நான்கு பேரை அடிப்படையா வெச்சு தான் கதையே நகரும். கதையில முக்கியமான திருப்பமே என்னோட கேரக்டர்லேருந்துதான்.
மியாவ் படம் எப்படி வந்துருக்கு?
தியேட்டர்ல பார்க்கிற ஆடியன்ஸுக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருக்கும். பூனைங்கறது எல்லா வீட்டுலயும் செல்லமா வளர்க்கப்படற பிராணி தான். அதனால ஆடியன்ஸ் ஈஸியா படத்துடன் கனெக்ட் ஆகிடுவாங்க. உண்மையான பூனைக்கும் கிராபிக்ஸ் பூனைக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாது. எல்லோருக்குமான படமா நல்ல எண்டெர்டய்னரா அமையும்.
ரோல் மாடல்?
விக்ரம் தான் பிடிக்கும். எனக்கு கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடிக்கறதுதான் பிடிக்கும். அதனால விக்ரம் சார் ரோல்மாடல். இப்ப உள்ள ஹீரோக்கள்ல விஜய்சேதுபதி அப்படி இருக்கார். வெறும் ஹீரோயிசத்தை மட்டுமே வெச்சு ட்ராவல் பண்ணாம அந்தந்த கேரக்டராகவே மாறிடறாரு. ஒவ்வொரு படத்துலயும் தனியா தெரியறாரு. அதனால விஜய்சேதுபதியும்!
நடிக்க பயிற்சி எடுத்துக்கிட்டீங்களா?
இல்லை. ஆனா விஜேவா இருந்தது பெரிய ப்ளஸ்னு சொல்வேன். திடீர்னு கேமரா முன்னாடி நிக்கிறதுக்கும் விஜேவா இருந்துட்டு வந்து கேமரா முன்னாடி நிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு. கேமரா பயம் இருக்காது. ரெக்கார்ட்ட் ஷோல்லாம் முதல்லயே ஸ்க்ரிப்ட் கொடுத்துடுவாங்க.. அதை
அப்படியே பண்ணனும். லைவ் ஷோ நிறைய பண்ணினதால கேமரா முன்னாடி பதற்றம் இல்லாம நடிக்க முடிஞ்சது.
அடுத்து?
சில படங்கள்ல பேசிக்கிட்டு இருக்கேன். லீட் ரோல்ஸ் பண்ணனும். இல்லைன்னா பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சப்போர்டிவ் ரோல் பண்ணனும். மியாவ் படத்துக்கு முன்னாடியே நிறைய ஆடிஷன் போயிருக்கேன். ஆனா கேரக்டர் எதுவும் பிடிக்காம திரும்பிடுவேன். பிடிச்ச கேரக்டர் தான் பண்ணனும்னு உறுதியா இருக்கேன்.