“தோனி என்கூட மட்டுமா சுத்தினாரு” ; சங்கடத்தில் ராய்லட்சுமி..!


பிரபல கிரிகெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ்.தோனி என்கிற பெயரில் படமாகியுள்ளது.. வரும் செப்-30ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தில் தோனி கேரக்டரில் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பவர் தோனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. ‘ஒரு சொல்லப்படாத கதை’ என்கிற டேக்லைனுடன் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் தோனியின் பெண் தோழிகள் பற்றி எந்த அளவுக்கு சொல்லப்பட்டு இருக்கும் என தெரியவில்லை.. குறிப்பாக தோனி என்றாலே நிச்சயம் நம் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ஞாபகம் வருபவர் நடிகை ராய் லட்சுமிதான்.

தோனியும் ராய் லட்சுமியும் சென்னை நகர வீதிகளில் பைக்கில் பறந்த காலம் ஒன்று உண்டு.. ஆனால் தோனியின் திருமணத்திற்குப்பிறகு ராய் லட்சுமி அப்படியே ஒதுங்கிவிட்டார். இப்போது ‘தோனி’ படத்தில் லட்சுமிராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுமா என லட்சுமி ராயிடம் கேட்கப்பட்டதற்கு, “மீடியாக்கள் தான் ஆரம்பத்தில் இருந்தே எங்கள் நட்பை பெரிதுபடுத்தி வருகின்றன.. அவர் என்னுடன் மட்டுமா டேட்டிங் பண்ணினார்.. அவருக்கு இன்னும் பல நண்பிகள் உண்டு.. இதனால் இந்த கேள்வியே தேவையில்லாதது” என குமுறலை வெளிப்படுத்தினாராம்.