மீண்டும் கீர்த்தி சுரேஷுடன் கல்யாண பேச்சை ஆரம்பித்த காமெடியன் சதீஷ்..!


எதையும் அலட்சியமாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது.. நமக்குத்தான் ராஜகுமாரன் – தேவயானி கதை தெரியுமே… அந்த மாதிரித்தான் ‘பைரவா’ பட பூஜையின் போது பட்டுவேட்டி சட்டை சகிதமாக அந்தப்படத்தில் நடிக்கும் காமெடி நடிகர் சதீசும், பட்டுசெலையில் கீர்த்தி சுரேஷும் வர இந்த மீடியாக்கள் தெரியாத்தனமாக இருவருக்கும் கல்யாணம் என்கிற ரீதியில் எழுதி தள்ளிவிட்டார்கள்..

இது கீர்த்திக்கு கசப்பாக இருந்திருக்குமோ என்னவோ,, ஆனால் சதீஷுக்கு தென் குடித்த மாதிரி இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை… கொஞ்ச நாட்களாக அடக்கி வாசித்தவர், நேற்று ‘ரெமோ’ படஹ்தின் நன்றி விழாவில் தானாகவே இந்தப்பேச்சை ஆரம்பித்தார்.

அதாவது தானும் கீர்த்தி சுரேஷும் நேராக பைரவா செட்டில் இருந்து வருவதாகவும், ஏற்கனவே கல்யாண கிசுகிசு வந்தபோது, சதீஷின் அம்மா என்னடா எனக்கு சொல்லாம கல்யாணம் பண்ணிட்டியா என கேட்டார்களாம். அப்படியெல்லாம் இல்லைம்மா என சொன்னதற்கு, ‘அப்பா ஆகலையா’ என வருத்தமாக கேட்டாராம் அவரது அம்மா. இதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி பேசிய சதீஷ், இப்போதும் அதுபோல ஏதாவது எழுதி விடாதீர்கள் என கூறினார்.. அப்படியானால் எழுதுங்கள் என்றுதானே அர்த்தம்.