நேற்று முன் தினம் ரெமோ படத்தின் நன்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னை வேலைசெய்யவிடாமல், தனது படங்களை வெளியிட விடாமல் சிலர் தடுப்பதாக கண்ணீரும் கம்பலையுமாக குற்றம் சாட்டினார். உடனே ஊடகங்கள் அனைத்தும் தனுஷின் பக்கம் தான் பார்வையை திருப்பின.. அவர்தானே சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியவர்.
அதனால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமலும், தனது படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாலும் திரை மறைவில் ஏதோ செய்கிறார் என கொளுத்திப்போட்டனர்.. ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை சொல்கிறோம்.. அதை வைத்தே தனுஷின் மீது சிவகார்த்திகேயன் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை கண்டுகொள்ளலாம்.
ரெமோ படம் வெளியாவதற்கு முன் கேரளாவுக்கு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சென்றார் சிவகார்த்திகேயன்.. அப்போது அங்குள்ள ‘பிளவர்ஸ் டிவி’ என்கிற சேனலில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.. அதில் அவரை மிமிக்ரி செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்..
முதலில் ரஜினி வாய்ஸில் மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன், அதை தொடர்ந்து தனுஷின் புகழ்பெற்ற காதல்கொண்டேன் வசனமான ‘திவ்யா.. திவ்யா” என்கிற வசனத்தை பேசி மிமிக்ரி செய்தார். அதற்கு செம கைதட்டலும் கிடைத்தது. சிவகார்த்திகேயன் பல நடிகர்களின் குரலில் மிமிக்ரி செய்வார் என்றாலும், ரஜினி குரலுக்கு அடுத்ததாக தனுஷை மிமிக்ரி செய்தது, தனக்கு சினிமாவில் நல்லதொரு பாதை அமைத்து தந்த தனுஷ் மீதான அவரது மரியாதையையே காட்டுகிறது.
அப்படி தனுஷ் இந்த பிரச்சனையின் பின்னணியில் இருந்திருந்தால் சிவாவால் எப்படி சந்தோஷமாக தனுஷின் குரலை மிமிக்ரி பண்ண முடியும்..? ஆக இந்த பிரச்சனையின் பின்னால் இருப்பது வேறொரு கட்டப்பஞ்சாயத்து டீம் தான் என்பது உறுதியாகியுள்ளது.