கடைதிறப்பு விழாக்களிலேயே காசு பார்க்கும் சமந்தா..!


திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் நன்றாக கொடி கட்டி பறந்துகொண்டிருக்கும்போதே திருமணம் செய்துகொள்வது அவர்களது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் கூட, சம்பந்தப்பட்ட நடிகைகளின் பெற்றோருக்கு குறிப்பாக அம்மாக்களுக்கு இது பலத்த அதிர்ச்சியான விஷயம் தான்..

ரிட்டையர்டு ஆன நடிகைகளையே இன்னும் திருமணம் செய்யவிடாமல் அவர்களது தாய்மார்கள் முட்டுக்கட்டை போடும் காலம் இது.. சமந்தா போன்ற, கோடிகளை சம்பளமாக வாங்க கூடிய நடிகை காதலித்து, கல்யாணமும் பண்ணிக்கொள்ளப்போகிறார் என்றால் அவரது குடும்பத்திற்கு வருமான இழப்பு தானே..

சமந்தாவின் பெற்றோர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ சமந்தா அப்படித்தான் நினைக்கிறார்.. தன்னை திருமணம் செய்துகொள்ள போகிறவர் வீட்டில், தான் தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லை என்பதால் புதிய படங்களில் ஒப்புக்கொள்வதை தவிர்த்து வருகிறார் சமந்தா.

அதேசமயம் அடுத்த வருடம் தான் தனது திருமணம் நடக்க இருக்கிறது என்பதால் விளம்பரங்களில் நடிக்க, கடைதிறப்பு விழாக்களில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்.. அவர்களும் சமந்தா கேட்கும் தொகையை கொடுக்க முன் வருகிறார்களே.. அதனால் படங்களில் ஏற்பட்ட வருமான இழப்பை இப்படி சரிக்கட்டி பெற்றோரை இந்தவிதமாக திருப்திப்படுத்த நினைக்கிறார் சமந்தா.. அதன் விளைவுதான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சேலத்தில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் சமந்தா கலந்துகொண்டதும்.