‘றெக்க’ இயக்குனருக்கு ஓவர் பில்டப் கொடுத்து விட்டார்களோ..?


அருண் விஜய்யை வைத்து ‘வா டீல்’ என்கிற படத்தை இயக்கியவர் இரத்தின சிவா.. அந்தப்படம் தயாராகியும் கூட கடந்த நான்காண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. ஆனால் அதே நேரம் இரத்தின சிவாவுக்கு விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கம் வாய்ப்பு கிடைத்து ‘றெக்க’ என்கிற படத்தையும் இயக்கி வெளியிட்டு விட்டார்..

ஆனால் ‘றெக்க’ படம் சரியாக போகவில்லை.. ரத்தினசிவாவின் திரைக்கதை நம்பவே முடியாத லாஜிக் மீறல்களுடன், படம் எப்படா முடியும் என்று சொல்லவைக்கும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் அந்தப்படம் வெளிவருவதற்கு முன் திரையுலகில் இரத்தின சிவாவுக்கு அப்படி ஒரு இடம் இருக்கிறது.. இப்படி ஒரு இடம் இருக்கிறது என ஒரு சிலர் ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுத்து வந்தார்கள்..

அப்படி சரக்குள்ள ஆசாமி என்றால் அவரது முதல் படமான வா டீல்’ இந்நேரம் பிசினஸாகி ரிலீஸாகி இருக்கவேண்டுமே என்கிறார்கள் திரையுலகை சேர்ந்த ஒருசிலர்.. இந்தநிலையில் லாரன்ஸ் நடிக்கும் படத்தை இரத்தின சிவா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த பில்டப் ரொம்ப நாளைக்கு உதவாது என்பதை இரத்தின சிவா உணர்ந்தால் சரி.