சிம்பு படத்தை வெளியிடுவதும் வயதுக்கு வந்த பெண்ணை காட்டிக்கொடுப்பதும் ஒன்றுதான்.. எந்த நேரத்தில் என்னனென்ன அதிர்ச்சிகளை தாங்கவேண்டுமோ என வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.. இதுவரை சிம்பு படத்தை இயக்கியவர்கள், தயாரித்தவர்கள் எல்லோரும் ஒரு யாகத்தீயில் குதித்து புடம்போட்ட தங்கங்களாக மாறி இருப்பார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
‘அச்சம் என்பது மடமையடா’ படத்தி நாளை மறுநாள் (நவ-11) வெளியிட இருக்கும் இயக்குனர் கௌதம் மேனனும் தற்போது அப்படி ஒரு நிலையில் தான் இருக்கிறார்.. இந்தப்படம் ரிலீசாகுமா ஆகாத என எந்த அளவுக்கு அவர் பயந்திருக்கிறார் என்றால், சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் போஸ்டரில் படத்தின் தயாரிப்பாளர் பெயரையோ, தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ குறிப்பிடவே இல்லை.
அது யாரென்பதை போட்டு, வீணாக பட ரிலீஸ் நேரத்தில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம். ‘அவஸ்தை’.. சிம்பு படத்தை இயக்கும் அனைத்து இயக்குனர்களுக்கும் அது இருந்தே தீரவேண்டும் போல.