விஜய் ஆண்டனியின் படங்களால் இதுவரை வசூல் ரீதியாக யாருக்கும் நஷ்டம் ஏற்படவில்லை. பிச்சைகாரன் படத்தின் வெற்றி அதன் வசூல் ஆகியவை அவரது அடுத்த படமான ‘சைத்தான்’ மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் ஆண்டனி நடித்து வெளியான படங்களில் இடைவிடாத வித்தியாசமான விளம்பரங்கள் மூலம் மக்களை ஈர்த்த படம் “பிச்சைகாரன்” குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஆன படம். அப்படத்திற்கு கையாளப்பட்ட விளம்பர யுக்தி வெற்றியை சாத்தியமாக்கியது.
“சைத்தான் “படத்திற்கு அது போன்ற வித்தியாசமான விளம்பரங்கள் கையாளப்படவில்லை. இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமை வாங்கியுள்ள ஆராஸ் நிறுவனம் இவர்கள் வெளியிட்ட எந்த படங்களுக்கும் விளம்பர விஷயங்களில ஆர்வமோ, வேகமோ காட்டுவதில்லை.
தமிழ்நாடு உரிமையை 7.25 கோடிக்கு வாங்கியுள்ள ஆராஸ் நிறுவனம் 7.75 கோடிக்கு விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்துள்ளது. படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளதால் கேளிக்கை வரி உண்டு.டிசம்பர் 2ல் மேலும் 3 படங்கள் ரீலீஸ் ஆவதால் “சைத்தான் “முதல் வார வசூலில் முதலீட்டை எடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
ஆராஸ் சினிமா வேகமாக படங்களை வாங்குவார்கள். வியாபாரம் செய்வார்கள், கணக்குகள் நேர்மையாக இருக்கும். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விவேகமான விளம்ர யுக்தி இவர்களிடம் இல்லை என்கின்றனர்
இவர்கள் வாங்கி வெளியிட்ட்ட பாடங்களில் ‘இருமுகன்’ படத்திற்கு தயாரிப்பாளர் சிபு தமீம் நேரடியாக விளம்பர பணியை மேற்கொண்டதால் அப்படம் வெற்றி பெற்றது. அதேபோல தேவி படத்தின் விளம்பர விஷயங்களை பிரபுதேவா நேரடியாகத் தலையிட்டு செய்ததால் அப்படம் தமிழகத்தில் சுமாரான வசூலை பெற்றது.
சைத்தான் தமிழ் நாட்டில் சுமார் 16 கோடியை வசூலாக பெற்றால் அசல் தேறுமாம் மவுத் பப்ளிசிட்டி மூலமாகத்தான் அதை சாதித்தாக வேண்டும் என்றே தெரிகிறது..