கிட்டத்தட்ட விஷால் அணியின் சார்பாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் குஷ்பு என்பதுதான் உண்மை. ஆனால் குஷ்புவோ, இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்ததே நான் தான்.. நான் படித்தவள்.. யோசிக்கும் அறிவுடையவள்.. அதனால் இன்னொருவர் எடுக்கும் முடிவுக்கு நான் ஒப்புக்கொண்டு போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை.. என கூறியுள்ளார் குஷ்பு.
ஆரம்பத்தில் நாசரின் மனைவி கமீலாவை நிற்கவைக்க விஷால் தரப்பில் முடிவு செய்திருந்தவர்கள் திடீரென குஷ்புவை முன்நிறுத்தியதற்கு காரணம் இருக்கிறதாம். கமீலாவை தயாரிப்பாளர் சங்க தேர்த்தலில் நிறுத்துவதில் நாசருக்கு உடன்பாடு இல்லையாம். காரணம் கலைப்புலி தாணு தரப்பை எதிர்க்க நாசர் விரும்பாததுதான்..
சமீபத்தில் நாசரின் மகன் நடித்த ‘பறந்து செல்லா வா’ படத்தை தனது பேனரில் வெளியிட்டார் கலைப்புலி தாணு.. அந்த நன்றிக்கடனுக்காகவும், தனக்கு உதவியவரை தேவையில்லாமல் ஏன் எதிர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில் தான் நாசர் பின் வாங்கி விட்டாராம்.
விஷாலுக்கு இதில் வருத்தம் தான் என்றாலும் உடனடியாக குஷ்புவிடமும் சுந்தர்.சிடமும் பேசினாராம்.. விஷாலின் இக்கட்டான சூழல் அறிந்த குஷ்பு, உடனே தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டாராம்.