ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கூட ‘வீரம்’ காட்டாத நம் ‘வேதாளம்’..!


ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் மாநில அரசும் அதன் கையாட்களாக போலீசாரும் செயல்பட்டு வரும் வேளையில் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு நிமிடத்துக்கு நிமிடம் பெருகி வருகிறது.. அதேசமயம் இத்தனை பிரச்சனைகளுக்கும் மூலகாரணமான ‘பீட்டா’ அமைப்புக்கு எதிர்ப்பு கூடிக்கொண்டே போகிறது..

திரையுலகை சேர்ந்த பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுவரை அமைதி காத்த சூர்யாவும், விஜய்யும், விக்ரமும் கூட ஜல்லிகட்டுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து விட்டனர். விஜய் ஒரு படி மேலாகவே போய், இதற்கெல்லாம் காரணமான ‘பீட்டா’வையே நாட்டை விட்டு அனுப்பீட்டா நல்லது என குரல் கொடுத்துள்ளார்..

இதில் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய விஷாலும் தானாகவே முன்வந்து, ‘நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல.. நான் பீட்டா அமைப்பிலும் இல்லை.. ஜல்லிக்கட்டு நடப்பதற்கான முயற்சிகளில் எனது ஆதரவும் உண்டு” என தனது நிலையை தெளிவுபடுத்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஆனால் எப்போதும் எதற்கும் கருத்து சொல்லாத, தமிழர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் குரல் கொடுக்காத, ஆனால் தமிழர்களின் பணத்தில் தன கோட்டையை எழுப்பியுள்ள ‘தல’ அஜித் மட்டும் இன்னும் ஜல்லிக்கட்டு பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன ஆளாளுக்கு பேசவும் ஏசவும் ஆரம்பித்துவிட்டார்கள்..

ஆளும் வர்க்கத்துக்கோ, அல்லது அடாவடி பீட்டா அமைப்பிற்கோ தான் கையால் இல்லை என்பதை விரைவிலேயே ‘தல’ உணர்த்தவேண்டும் என அவரது ரசிகர்களே கூட முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்கள்..

‘தல’ எப்போது மௌனம் கலைப்பார்..?