த்ரிஷாவுக்கு எதிராக திரும்பிய பீட்டா..!


ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே நடிகை த்ரிஷாவுக்கு எதிராக முழக்கங்கள் ஆரம்பித்துவிட்டது உண்மை.. அவர் கொஞ்ச நேரம் எதிர்த்துவிட்டு பின்னர் சமாளிக்க முடியாமல் அவரது அம்மா மூலமாக, தான் பீட்டாவில் இல்லை என்றும், ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை என்றும் கூவினார். போதாதற்கு நடிகர் சங்கம் நடத்திய ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்துகொண்டு, நானும் ஜெயிலுக்கு போறேன் என்கிற ரீதியில் தனது ஆதரவை ஜல்லிக்கட்டுக்கு தெரிவித்தும் விட்டார்..

இந்தநிலையில் இவர் யாருக்காக இவ்வளவு நாள் தமிழக மக்களை எதிர்த்து கருத்துக்கள் கூறிவந்தரோ அந்த பீட்டாவே இவருக்கு எதிராக இப்போது சேற்றை அள்ளி வீசியிருப்பது தான் ஆச்சர்யம். ஒருபக்கம், நாய்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து பிரசாரம் செய்யும் த்ரிஷா இன்னொரு பக்கம் காளையை கொடுமை செய்யும் விளையாட்டை ஆதரிக்கின்றார். இது முரண்பாடாக உள்ளது, த்ரிஷா எங்கள் விளம்பர தூதரே கிடையாது’ என்று கூறியுள்ளதாம் பீட்டா.