தன்னை தேடி கதைசொல்ல வருபவர்களிடம் கதாநாயகிகள் பந்தா காட்டுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத ரோகிணி எல்லாம் பந்தா பண்ணுவார் என்றால் நம்பமுடிகிறதா..? ஆனால் உண்மை என்றே சொல்கிறார்கள் நேரில் அதை கண்டு வந்தவர்கள்..
சமீபத்தில் வெளியான ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தில் சசிகுமாரின் அம்மாவாக நடித்திருந்தார் ரோகினி. படம் ஓடாவிட்டாலும் கூட ரோகிணியின் நடிப்பு பேசப்பட்டதால் அவரை ஒப்பந்தம் செய்ய பல இயக்குனர்கள் தயாராக இருக்கிறார்கள்..
அப்படி ஒரு புதுப்பட இயக்குனர் ரோகிணியிடம் தனது படத்தில் நடிக்கும்படி கேட்க, வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு வாருங்கள் பேசலாம் என சொன்னாராம்.. அங்கே போனவர்களுக்கோ காத்திருந்தது அதிர்ச்சி.. மாலை இருட்டும் நேரம் ஆனாலும் கூட விளக்குகள் எதுவும் போடவில்லையாம்..
வந்தவர்களையும் வாசலிலேயே உட்கார வைத்த ரோகிணி ஒரு டீ கூட போட்டுக்கொடுக்கவில்லையாம். அதோடு அவர்கள் சீரியஸாக கதைசொல்ல, அவரோ செல்போனை காதில் வைத்து யாருடனோ பேசிக்கொண்டே இருந்தாராம்.. கடைசியில் கதைசொல்லி முடிதததும், கையில் போனை வைத்துக்கொண்டே “சரி.. நான் சொல்லி அனுப்புறேன்.. கிளம்புங்கள்” என்றாராம்..
திகிலடித்து போய் திரும்பியவர்களோ, நாம் என்ன நயன்தாராவுக்கா கதை சொல்லப்போய் வந்தோம் என்கிற அளவுக்கு திக் பிரம்மையிலே இருக்கிறார்களாம்.