ஜோதிகா மீண்டும் நடிக்கவந்தபின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.. அப்படியானால் மற்ற முன்னணி நடிகர்களோடு நடிக்க மாட்டாரா என்கிற கேள்வியும் எழத்தான் செய்தது..
அதை உடைக்கும் விதமாக அட்லீ டைரக்சனில் விஜய் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக ஜோதிகாவை நடிக்க கேட்டபோது அவரும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார்.. இப்போது விஜய் தடி, முறுக்கு மீசையுடன் வலம் வருகிறார் அல்லவா, அந்த கேரக்டருக்கு பிளாஸ்பேக் காட்சிகளில் தான் ஜோதிகா ஜோடியாக நடிப்பதாக இருந்தது..
ஆனால் தற்போது இந்தப்படத்தில் இருந்து திடீரென ஜோதிகா விலகிவிட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.. விசாரித்ததில் இதன் பின்னணியில் அட்லீ தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.. அவரது டைரக்சனில் ஏற்கனவே சமந்தா நடித்துள்ளார் அல்லவா.? அதனால் இந்தப்படத்திலும் சமந்தாவை சந்தோஷப்படுத்தும் விதமாக அவருக்கு காட்சிகளை அதிகப்படுத்தினாராம் அட்லீ..
அதேசமயம் ஜோதிகாவின் முக்கியத்துவத்தை குறைக்கும் விதமாக காட்சிகளை குறைத்து, வசனங்களையும் மாற்றினாராம். முழு ஸ்கிரிப்ட்டையும் படித்த ஜோதிகா அதிர்ச்சியாகி, அதன்பின் தான் படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்தாராம்..
நாளை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கப்போகின்ற சமந்தாவை சந்தோஷப்படுத்துவதற்காக, திருமணமாகி மீண்டும் நடிக்க வந்துள்ள ஜோதிகாவை சங்கப்படத்துவதில் என்ன நியாயம் என்றே படக்குழுவினரில் பலரும் பேசிக்கொள்கிறார்களாம்.