அப்போது ஏற்ப்பட்ட அந்த கோவம்தான் என்னை இப்படி படம் எடுக்க வைத்தது – பாரதிராஜா!

அடிமட்ட கண்டுபிடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற மையத்தை அடிபடையாக வைத்து எடுக்கப்பட்ட
படம்தான் கனவு வாரியம்.இப்படம் திரைக்கு வருவதற்க்கு முன்னரே இரண்டு ரெமி விருதுகளை பெற்று படத்திற்க்கு
பெருமை சேர்த்துள்ளது இது மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நிருவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல்
தமிழ் படம் என்பது மற்றுமொரு பெருமையாகும் இன்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்
இயக்குனர் சிகரம் பாரதிராஜா,இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிருவனதின் இயக்குனர் சிவன்(ISRO),பாடகர் சீர்காழி
சிவசிதம்பரம்,இந்திய ரூபாய் சின்னத்தின் வடிவமைப்பாளர் உதய்குமார்,நல்லகீரை ஜெகநாதன் மற்றும் தமிழ்நாடு
வெதர்மேன்(Weather Man)ப்ரதீப் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்

விழாவில் கலந்துகொண்ட பிரபல பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில் இப்போதுள்ள இளைஞர்கள் கணிணியில் வேலை
பெருநிறுவன(corporate) வாழ்க்கை என்று இல்லாமல் மீண்டும் ஆரம்பகால இயற்க்கை விவசாயத்தை பின்பற்றுவது
பெருமையக இருக்கின்றது என்றும் என்னுடைய மகனும் இப்பொழுது இயற்க்கை விவசாயத்தை மேற்க்கொள்வது
எனக்கு பெருமை அழிக்கிறது என்று விழாமேடையில் கூரினார்

விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சிகரம் பாரதிராஜா பேசுகையில் இப்போதுள்ள தமிழ் சினிமாவில் எடுக்கும் மாஃபியா படங்களுக்கு நடுவில் இப்படம் மண்வாசனயை கொடுத்திருக்கிறது அதுமட்டுமின்றி நம்முடைய பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் பதிவு செய்திருப்பது சிறப்பு என்றும் இயக்குனரின் தந்தை ஆணழகன் சிதம்பரம் அவர்களை பற்றியும் சிவந்தி ஆதித்தனார்,எம்.ஜீ.ஆர் இருவரும் அவருடன்
எப்படி நட்புடன் இருந்தனர் என்பதை பற்றியும் கூறினார்.

என்னுடைய ஆரம்பகாலங்களில் அப்போது எடுக்கும் ஒரு செட்டிற்க்குல் எடுக்கும் சினிமாக்களை கண்டு கோவம் அடைவேன். அதன் பின்புதான் கேமாராவை செட்டிற்க்குள் இருந்து வெளியே கிராமத்திற்க்கு எடுத்து சென்றேன் அந்த கோவம்தான் என்னை இப்படி படம் எடுக்க வைத்தது என்றும் கூறினார், மேலும் அவர் விழாவில் கலந்துகொண்டிருந்த சிறப்பு அழைப்பாளர்களையும் கொளரவபடுத்தினார்.

படத்தின் இயக்குனர் அருண் சிதம்பரம் இந்த படத்தை பற்றி பேசுகையில் இப்படமானது புதிய சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகளையும் உருவாக்குபவர்களை தேடி கண்டுபிடிக்கப்படவேண்டும், அதுமட்டுமல்ல அவர்களை கொண்டாடவேண்டும் என்றும் மேலும் இப்படத்தை பிரபல ஹாலிவுட் நிருவனம் வார்னர் பிரதர்ஸ் வெளியிடுவது இப்படத்தின் மேலும் ஒரு சிறப்பு என்றும் கூரினார்..

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிருவனதின் இயக்குனர் சிவன்(ISRO)கூரியதாவது `இது எனக்கு ஒரு வித்யாசமான நிகழ்வு என்றும் இந்த படத்தின் ஒரு பாடலை பார்க்கும் போது என்னுடய சிறுவயது கிராமத்து வாழ்க்கையும் நியாபக படுத்தியது…
இப்படம் gross root innovation என்று சொல்லக்கூடிய அடிமட்ட கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கும் வகையில் இருப்பது இன்னுமொரு பெருமை என்றும் மேலும் இயக்குனர் சிகரம் பாரதிராஜாவுடன்
இந்த மேடையை பங்கு கொண்டதற்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது என்று கூறினார்

பாரதிராஜா கூரியதுபோல் மாறிவரும் தமிழ்சினிமாவில் மண்வாசனையையும்,பண்பாட்டையும் வெளிபடுத்தும்
இந்த படைப்பை வெற்றி பெற செய்ய வைக்குமாறு விழாவில் கலந்துகொண்ட படகுழுவினாரால் கேட்டுக்கொள்ளப்பட்டது