ஜல்லிக்கட்டை ஆதரிப்பவரும் எதிர்ப்பவரும் இணைந்து நடிப்பதால் தான் இப்படி ஒரு டைட்டிலா..?


சில தினங்களுக்கு முன் த்ரிஷா நடிக்கும் படம் என ‘96’ என்கிற டைட்டிலுடன் ஒரு அறிவிப்பு வெளியானது.. இது என்னடா புதுசா நண்பரில் டைட்டில் வைக்கிறார்கள், ஒருவேளை கதைக்கும் கதாநாயகிக்கும் மட்டுமே முக்கியத்துவம் உள்ள படமாக இருக்கும் என்பதுதான் பலரின் மனதிலும் ஓடியது.

ஆனால் அதன்பின்னர் தான், இந்தப்படத்தில் கதாநாயகனாக, த்ரிஷாவின் ஜோடியாக நடிப்பவர் விஜய்சேதுபதி என்பது வெளியே தெரியவந்தது. இதில் என்ன ஆச்சர்யம் பார்த்தீர்களா..? ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த பீட்டாவுக்கு ஆதரவாக இருந்தார் என ரசிகர்களால் பொதுமக்களால் எதிர்ப்புக்கு ஆளானவர் த்ரிஷா..

அதேசமயம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்ட சமயத்தில் களத்தில் இறங்கி தன்னுடைய ஆதரவை தெரிவித்தவர்தான் விஜய்சேதுபதி.. இந்த முரண்பட்ட இருவர் இணைந்து நடிப்பதனால் தானோ என்னவோ ‘96’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள் போலும்.