விஜய் டிவி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரம்யா.. தற்போது டிவியை விட்டு விலகி சினிமா விழாக்களை தொகுத்து வழங்கும் பணியை செய்து வருகிறார். மேலும் திடீரென நடிகையாக அவதாரம் எடுத்து ஒன்றிரண்டு படங்களில் தலைகட்டியும் வருகிறார். இந்தநிலையில் தான் ரம்யாவின் இன்னொரு முகம் வெளிப்பட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது
ஆம்.. பளுதூக்கும் வீராங்கனை என்கிற முகத்தை இத்தனை நாட்கள் மறைத்தே வைத்திருக்கிறார் ரம்யா. தற்போது தமிழ் நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று இருக்கிறார் நடிகை ரம்யா.. இப்போதுதான் இந்த விஷயமே வெளியில் வந்திருக்கிறது.
“27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி தற்போது 35 கிலோ பிரிவில் நான் பங்கேற்று இருக்கிறேன். போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது இந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறேன். இதன் மூலம் நான் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்று இருக்கிறேன்” என்கிறார் ரம்யா.