‘வந்தா மல’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது VZ.துரை இயக்கத்தில் உருவாகும் ‘ஏமாலி’ படத்திற்கும் மேலும் 2 படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் அமெரிக்காவை சேர்ந்த ‘நெட்பிலிக்ஸ்’ எனும் நிறுவனம் பிரபலம் என்பது நாம் அறிந்ததே. அந்த நிறுவனம் சமீபத்தில் இசையமைப்பாளர் ‘சாம் டி ராஜ்’ அவர்களை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் ஸ்டுடியோவில் சந்தித்து இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் தனது கிளையை துவக்காத ‘நெட்பிலிக்ஸ்’ நிறுவனம் அடுத்த மாதம் மும்பையில் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வீடியோ சேவையில் பிரபலபமான இந்த நிறுவனம் ஏற்கனவே ஷாருக்கான் அவர்களின் ‘ரெட் சில்லிஸ் என்டர்டைன்மென்ட்’ மற்றும் ‘ரிலையன்ஸ் ஜியோ’யுடன் இணைந்து செயல்படயுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் மூலம் வழங்குவதில் இந்த நிறுவனமே முதல் இடத்தில உள்ளது. தற்போது அமெரிக்காவில் பிரபலமாகியுள்ள இந்த ட்ரெண்ட் 2018-க்குள் இந்திய தயாரிப்பு நிறுவங்களும் டிவி நிறுவனங்களும் பின்பற்றும்.