விஷாலுக்கு ஒரு வெற்றிப்படம் கிடைக்க கலைப்புலி தாணுவின் யோசனை..!


கலைப்புலி தாணுவுக்கும் விஷாலுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த ரகசியம்.. தற்போது இருவரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றனர்.. இந்தநிலையில் எதிரெதிர் அணிகளாக இருந்த கலைப்புலி தாணு ஆதரிக்கும் ராதாகிருஷ்ணன் அணியும் கலைப்புலி சேகரன் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்தன.. விஷாலை எதிர்க்க பலமான கூட்டணி வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சியாம்..

இந்த நிகழ்வில் பேசிய தாணு, “கலைப்புலி சேகரனுக்கும் எனக்குமான நட்பு பழமையானது. ஆழமானது. அப்போதெல்லாம் அவர் எவ்வளவோ கதைகள் கூறுவார் ‘பொல்லாத ஊரு’ என்றொரு கதை. இன்று எடுத்தாலும் ஓடும். விஷால் இதில் நடிக்கலாம் ஒரு வெற்றிப் படமாவது கிடைக்கும்” என அவ்வளவு சீரியசான நேரத்திலும் ஜோக்கடித்துள்ளார் தாணு.