சமீபத்தில் வெளியான ‘கவண்’ படத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டியுள்ளார் என ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் ஓடிக்கொண்டு இருக்கிறது.. அமெரிக்க ஜனாதிபதிக்கும் கவண் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எழத்தான் செய்யும். உள்ளே நுழைந்து அலசினால் அட என்னப்பா இப்டி பண்றீங்களே என்கிற விதமாகத்தான் வேலை நடந்திருக்கிறது
அதாவது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் கணக்கில், “நான் சொன்னது போலவே கவண் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறீர்கள்” என டிரம்ப் பாராட்டுவது போல் டுவீட் போடப்பட்டுள்ளது. இதற்கு கே.வி.ஆனந்த், “அடப்பாவிகளா.. கடைசியில் டிரம்ப் தலைலேயே கைவெச்சிட்டீங்களா?” என கேட்டுள்ளார்.
கே.வி.ஆனந்த் டிவிட்டராவது..?
ஒரிஜினல் தான்.. ஒரிஜினல் தான்..