தேவயானி துவக்கி வைக்கும் ‘பொம்மீஸ் சில்க்ஸ்’ பேமிலி ஷோரூம்!

பொம்மீஸ் நிறுவனத்தின் புதிய பேமிலி ஷோரூமான பொம்மீஸ் சில்க்ஸ் சென்னையில் 2 இடங்களில் திறக்கப்படுகிறது. அம்பத்தூரில் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதியும், தாம்பரத்தில் ஏப்ரல் 16-ந்தேதியும் திறக்கப்பட உள்ளன. இந்த புதிய ஷோரூம்களை நடிகை தேவயானி திறந்து வைக்கிறார்.

‘பொம்மீஸ்’ நைட்டி அணிந்தபிறகு தான் நான் குடும்பத்தலைவியாக உணர்கிறேன்” என தேவயானி பெருமிதம் பொங்க டிவி விளம்பரங்களில் சொல்வாரே.. அது உண்மையான வார்த்தைகளே.. இன்று இல்லத்தரசிகள் பலரும் இதே வாக்கியத்தை தங்களுக்கு தோன்றும் விதமாக தங்களது நட்பு வட்டாரத்தில் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு பெண்களின் வாழ்வில் ஒரு அங்கமாக ‘பொம்மீஸ்’ ஆகிவிட்டது.

1998ல் ராஜபாளையம் பக்கம் ஒரு கிராமத்தில் 300 சதுர அடி அளவுகொண்ட ஒரு அறையில் உள்ளாடை தயாரிக்கும் நிறுவனமாக ஒரு சிறிய செடியாக துவங்கிய இந்த நிறுவனம் இன்று தமிழகமெங்கும் ஒரு ஆலமரமாக வளர்ந்து சுமார் 52 ரீடெய்ல் அவுட்லெட்களாக கிளைகள் பரப்பி இயங்கி வருகிறது என்றால் அதன்பின்னால் இந்த நிறுவனத்தின் இரண்டு தூண்களாக விளங்கும் இனிகோ இன்பராஜ் மற்றும் ராஜா இருவரின் தன்னம்பிக்கை மற்றும் அயராத உழைப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

இதன் வளர்ச்சியை, பொம்மீஸ் நிறுவனம் கடந்து வந்த பாதையை பற்றி சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், 1998ல் வெறும் 4 ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று 1500 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. 1998ல் 12 லட்சத்துக்குள் இருந்த ஆண்டு மொத்த நிகர விற்பனை கடந்த 2016ல் 210 கோடியை எட்டியது.. வரும் 2017-2018 ஆண்டுகளில் 250 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1999ல் வங்கியில் 4 லட்சம் என்கிற அளவிலே கிடைத்த கடன் தொகை, இன்று ‘பொம்மீஸ்’ மொத்த நிறுவனங்களின் வங்கிக்கடன் மதிப்பு 56 கோடியாக உயர்ந்திருக்கிறது என்றால் ‘பொம்மீஸ்’ தயாரிப்புகளின் தரமும் நேர்மையான வியாபாரமும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்…

பொம்மீஸ் அவுட்லெட்டுகளை தொடர்ந்து கடந்த வருடம் முதல் Pommya Apparels, Pommys Readymades, Pommys potique என தங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு விரிவுபடுத்திக்கொண்டுள்ளது ‘பொம்மீஸ்’..

பொம்மீஸ் நிறுவனத்தின் புதிய பேமிலி ஷோரூமான பொம்மீஸ் சில்க்ஸ் சென்னையில் 2 இடங்களில் திறக்கப்படுகிறது. அம்பத்தூரில் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதியும், தாம்பரத்தில் ஏப்ரல் 16-ந்தேதியும் திறக்கப்பட உள்ளன. இந்த புதிய ஷோரூம்களை நடிகை தேவயானி திறந்து வைக்கிறார்.

மேற்படி பொம்மீஸ் சில்க்ஸ் நல்ல வரவேற்பு பெறும் பட்சத்தில், தமிழ்நாட்டு முழுவதும் 20 Pommys Silks – Family Textiles Shop துவங்கவும் வாய்ப்புள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.