ஆறுபடை மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ‘லாலி லாலி ஆராரோ’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் பிரபல நடிகர் சரண்ராஜ் மகன் தேஜ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ஷிவானி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் மனோபாலா, லஷ்மிபிரியா மேனன், ஷினாஜ், ஜீவாரவி, விஜய் டிவி புகழ் திவாகர் ஆகியோர் நடிக்கிறார்கள் கே.கே.( கிருஷ்ணகுமார் ) வில்லனாக நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – நாகபூஷன் / இசை – ராமகோபால கிருஷ்ணன்
பாடல்கள் – ராஜகனி / எடிட்டிங் – ஆனந்த்.ஆர்.ஜி / நடனம் – ராபர்ட்சுரேஷ்
ஸ்டன்ட் – ஓம்பிரகாஷ் / கலை – மகிரங்கி / தயாரிப்பு மேற்பார்வை – ஷியாம்சரஸ்
இணை தயாரிப்பு – மஞ்சுநாத். MRL ,ரவிகுமார், S.V.K.பிரதர்ஸ்,C.தேவேந்திரராஜா
தயாரிப்பு – திரு.ஆறுபடையப்பன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – லிங்கன்ராஜாளி
படம் பற்றி இயக்குனர் லிங்கன் ராஜாளியிடம் கேட்டோம்..
அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி, அதே போல் தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்ற நினைப்பில் உள்ள அம்மா. இவர்களுக்கு இடையில் காதலியாக, மதுரா உள்ளே வர அதை அந்த குடும்பம் எப்படி எதிர் கொள்கிறது என்பதுவும்.. தன் மகள் தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு தகப்பன். தகப்பனை தவிர உலகத்தில் உயர்ந்தது இல்லை என்று வாழும் மகள். இவர்களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர அதை எப்படி அந்த குடும்பம் எதிர் கொள்கிறது என்பதும் தான் இந்த படத்தின் கதை !
இதை செண்டிமெண்ட் கலந்து குடும்பத்துடன் பார்க்கும் படமாக உருவாக்கி உள்ளோம் என்றார் இயக்குனர் லிங்கன்ராஜாளி. படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், மற்றும் கேரளா பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று நடைபெற உள்ளது.