ஸ்டூடண்ட் வெல்பேர் அசோசியேஷன் “லைப் ய லேபிள்” நிறுவனம் நடத்திய பேஷன் ஷோ சென்னை போரூர் V7 ஹோட்டலில் நடைபெற்றது . சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஆடை வடிவமைப்பு துறை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற பேஷன் ஷோ இரண்டு நாட்கள் நடைபெற்றது.
வழக்கமான மாடல்கள் அணிவகுப்புகளுக்கு மத்தியில் வித்தியாசமாக இரண்டு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது முதியவர்கள்களுக்கான ஆடை அணிவகுப்பு நடந்தது , அணிவகுப்பில் திருநங்கை , மாற்று திறனாளி , கர்ப்பிணி பெண் , மற்றும் அதிக உடல் எடையுடையவர்களுக்கான ஆடை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது ..
“லைப் ய லேபிள்” அமைப்பாளர் அருள்மொழி பேசும்பொழுது தமிழகத்தில் ஆடை வடிவமைப்பு வேலைவாய்ப்புகளும் இப்போது அதிகரித்து வருகிறது . அதை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற பேஷன் ஷோக்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம் . ஆடை வடிவமைப்பு மாணவர்களுக்கு ஊக்கமும், அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதர்க்கான ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கிறோம் . இனி சென்னை மட்டுமல்லாது மதுரை, கோவை போன்ற நகரங்களிலும் இனி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் .
நிகழ்ச்சியில் நடிகர் அஜ்மல் , காளிவெங்கட் , முரளிராம் , நடிகை சஞ்சனா சிங் , சஸ்வதா , வைகா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள் . லயன்ஸ்கிளப் , மற்றும் பஜாஜ் ,வசந்த் அந்த கோ , நிர்வாகிகளும் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்கள் ..