“வாயை கொடுத்து மாட்டிக்கொண்டேனே” ; புலம்பும் த்ரிஷா..!


ஹீரோக்களுடன் டூயட் பாடுவதை தவிர்த்து, கதையின் நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக, தானும் அது மாதிரி தனி கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார் த்ரிஷா.

இப்போ என்ன ஆச்சு என்றால், தெலுங்கு திரையுலகில் இருந்து பல பேர், தயாரிப்பாளர், இயக்குனர் என சொல்லிக்கொண்டு போன் செய்து உங்களுக்கேற்ற ஹீரோயின் சப்ஜெக்ட் என்னிடம் இருக்கு எப்போ பேச வரலாம் சொல்லுங்கள் என நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்களாம்..

த்ரிஷாவுக்கென மேனேஜர் யாரும் இல்லாததால், இதில் யார் உண்மையான ஆட்கள், யார் போலி ஆசாமிகள் என கண்டுபிடிக்க முடியாமல் திணறும் த்ரிஷா, ஏன்தான் இப்படி சொன்னோமோ என நொந்துபோய் கிடக்கிறாராம்.