ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி கிண்டல்..!


பொதுவாக சத்யராஜ் போன்ற ஒருசில சக நடிகர்கள் ரஜினியின் மீதுள்ள பொறாமையால் அவ்வப்போது அவரை கிண்டல் செய்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபவது நமக்கு தெரியும் தான்.. ஆனால் நடிகைகள் அந்த விஷயத்தில் ரஜினி பற்றி வாயே திறப்பது இல்லை.. அப்படி ஒரு காலத்தில் தேவையில்லாமல், தேவையற்ற இடத்தில் அவரை பற்றி அவதூறாக விமர்சித்தார் மறைந்த ஆச்சி மனோரமா.

ஆச்சி தமிழச்சி தான் என்றாலும் அவதூறு பேசியவருக்கு கிடைத்ததென்னவோ சாபம் தான்.. பின் யார் மீது செர்ர்ரை வாரி இறைத்தாரோ, அந்த ரஜினியால் தான் அவருக்கு சாப விமோசனமும் கிடைத்தது தனிக்கதை.

நிலைமை இப்படி இருக்கையில் சமீபத்தில் கடந்த ஐந்து நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கிட்டத்தட்ட தெளிவுபடுத்தியுள்ளார். இதில் அரசியல் தலிவர்கள், சில கட்சிக்காரர்கள் தங்களது கருத்துக்களை சொல்லி வருகிறார்கள்.. அது வழக்கமான ஒன்றுதான்..

ஆனால் ரஜினி என்பதாலேயே ஆலம் கட்சி தரப்பை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா போன்றவர்கள் எல்லாம் ரஜினியின் கருத்துக்கு பதில் சொல்லாமல் நழுவிவிட, இதில் சம்பந்தமே இல்லாமல் திடீரென மூக்கை நுழைத்து கருத்து சொல்லியிருக்கிறார் ரிடையர்டு நடிகையான கஸ்தூரி..

அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து..? “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாரா சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவரால் அதெப்படி சாத்தியமாகும்” என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கூடவே “நானும் ஆரம்பத்தில் இருந்தே தலைவரின் ரசிகை தான்.. ஆனால் கிட்டத்தட்ட 20 வருடமாக காத்திருந்த ஆற்றாமையில் தான் இதை சொல்கிறேன்.. உங்களுக்கும் இந்த எண்ணம் உண்டா இல்லையா” என எதிர் கேள்வி கேட்பவர்களை கூல் பண்ணும் விதமாகவும் ஒரு பதில் கொடுத்துள்ளார் கஸ்தூரி.

கஸ்தூரியின் இந்த கிண்டல் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கோபப்பார்வை வீசுவது ஒரு பக்கம் இருக்கட்டும், கஸ்தூரிக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை என திரையுலகினரே அவர் மீது பரிதாப பார்வை வீசியுள்ளார்கள்.