ஜி.எஸ்.டி விவகாரத்தில் ரஜினியை கோர்த்துவிட்ட அம்மா கிரியேஷன்ஸ் சிவா..!


ஜி.எஸ்.டி வரி விவகாரம் திரையுலகினரை விழி பிதுங்க வைத்துள்ளது. நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட வேண்டியது தான் என கமலையே அலற வைத்துள்ளது.. மத்திய அரசிற்கு பலரும் இந்த வரியை குறைக்க சொல்லி பலவிதமாக கோரிக்கைகளை வைத்துக்கொண்டு இருக்க ஒரே ஒருவர் தலையிட்டால், குரல் கொடுத்தால் இந்த பிரச்சனையில் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது என சூப்பர்ஸ்டார் ரஜினியை நோக்கி கைகாட்டியுள்ளார் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா

சமீபத்தில் நடைபெற்ற பட ஆடியோ விழா ஒன்றில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இன்று ரஜினி குரல் கொடுத்தால் மட்டுமே மத்திய அரசும் பிரதமர் மோடியும் இந்த ஜி.எஸ்.டி விவகாரத்தில் திரையுலகினரின் பக்கம் பரவிய திருப்புவார்கள்.. அந்த சக்தி ரஜினிக்கு உண்டு. இனியும் ரஜினி மௌனமாக இருக்க கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.. இல்லையில்லை கோர்த்துவிட்டுள்ளார் என்றே சொல்லலாம்.