30 வருஷமா தெலுங்குல நடிக்கிறார்.. ஆனா அந்த விஷயம் மட்டும் இவருக்கு தெரியாதாம்..!


இந்திய சினிமாவில் மோசமான அரசியல்வாதிகளையும் ஊழல் அரசு அதிகாரிகளையும் தயங்காமல் தட்டிக்கேட்கும் பவர் இருவருக்குத்தான் தரப்பட்டிருந்தது.. ஒருவர் நம்ம கேப்டன் விஜயகாந்த்.. இன்னொருவர் ‘இது தாண்டா போலீஸ்’ டாக்டர் ராஜசேகர்.

நம்ம தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் என்றாலும் டாக்டர் ராஜசேகர் கொடி நாட்டியது என்னவோ தெலுங்கு சினிமாவில்தான். கடமை உணர்வு மிக்க போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த படங்கள் வசூலை வாரிக்குவித்ததோடு மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கையும் ஏற்படுத்தின.

கடந்த முப்பது வருடங்களாக இவர் தெலுங்கு சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்தாலும் தெலுங்கில் எழுதவோ படிக்கவோ தெரியாதாம். ஆனால் நன்றாக தெலுங்கு பேசுவாராம்.. அதனால் தனது படத்தின் வசனங்களை தமிழில் எழுதி வைத்து மனப்பாடம் செய்து அதைத்தான் ஷூட்டிங்கிலும் டப்பிங்கிலும் பேசி வருகிறாராம்.