“இதவிட யாருங்க சண்டை போட்டாங்க..? ; சுசீந்திரன் வருத்தம்..!


தமிழக அரசு அறிவித்த விருதுகள் பற்றி இயக்குனர் சுசீந்திரனுக்கு ரொம்பவே வருத்தம்.. இயக்குனர் ஏ.வெங்கடேஷாவது தனக்கு ஏன் கிடைக்கவில்லை என குமுரலியா வெளிப்படுத்தினார். ஆனால் சுசீந்திரனோ, தனது படத்தில் பணியாற்றிய சண்டைக்கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்படதாதால் மிகுந்த அனா வருத்தத்தில் உள்ளார். அதை வெளிப்படுத்தவும் செய்துள்ளார்.

2010ஆம் வருடம் கார்த்தி நடித்த நான் மகான் அல்ல’ படத்தை இயக்கியிருந்தார் சுசீந்திரன்.. அதில் க்ளைமாக்ஸில் இடம்பெற்றிருந்த பத்து நிமிட சண்டைக்காட்சி ரசிகர்களின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்தது.. இதுநாள் வரை அதற்குப்பின் அதுபோன்ற ஒரு உக்கிரமான, வித்தியாசமான க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி வேறெந்த படத்திலும் வந்ததாக தெரியவில்லை..

ஆனால் அந்தப்படத்தில் சண்டை இயக்குனர்களாக பணியாற்றிய அன்பறிவ் என்கிற இரட்டையருக்கு விருது கிடைக்கும் என சுசீந்திரன் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால வந்தே மாதரம் என்கிற படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு சிறந்த விருது கொடுத்துள்ளார்கள்…

அதுசரி வந்தே மாதரம் என ஒரு படம் வந்தது..? நீங்கள் பார்த்தீர்கள்..? அட போங்கயா..