ஷ்ராபாணி பாசு எழுதிய நாவலான Victoria and Abdul ஐ தழுவி, லீ ஹாலின் திரைக்கதை அமைப்பில் அமைந்துள்ள படம் தான், Victoria & Abdul.
சரித்திர பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் Judi Dench Victoria மஹாராணியாக தோன்றி நடித்துள்ளார். இவர் Academy விருது பெற்ற ஒரு சிறந்த நடிகை என்பது தெரிந்த விஷயம்! சமீப காலங்களில், James Bond படங்களில் M என்கிற கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
3 Idiots என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமாகி, Always Kabhie Kabhie, Fukrey, Bobby Jasoos, Sonali Cable போன்ற படங்களில் நடித்துள்ள Ali Fazal இதில் Abdul கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்!
இப்படத்தின் திரைக்கதை, Victoria மஹாராணிக்கும் இந்தியாவை சார்ந்த Abdul என்கிற வேலை ஆளுக்கும் இடையே எழும் மென்மையான, அப்பழுக்கற்ற ஸ்நேகம் பற்றி உணர்வு பூர்வமான விதத்தில் எடுத்து சொல்கிறது!
மஹாராணியின் பொன்விழா கொண்டாட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து செல்லும் Abdul, மஹாராணியின் உதவியாளராக மட்டுமின்றி ஒரு சிறந்த ஆசானாகவும் செயல் படுகிறான்! உன்னதமான, உயரிய முறையில் உருவான அவர்களது நட்பு, புதிய பரிமாணங்களை தொடுகிறது! தூய்மையின் பிரதிபலிப்பாக விளங்கும் அவர்களது தொடர்பு, சுற்றி உள்ளவர்களுக்கு வேறொரு கண்ணோட்டத்தில் தென்படுகிறது!
Abdul இன் கண்கள் மூலம், இந்த உலகை புதியதொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறாள், Victoria மஹாராணி!
Eddie Izzard, Adeel Akthar, Michael Cambon மற்றும் Tim Piggot-Smith ஆகியோரும் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்துள்ளனர்.
Thomas Newman இசை அமைக்க, Danny Cohen படத்தின் ஒளிப்பதிவை கையாண்டு உள்ளார்.
Stephen Frears படத்தை இயக்கி உள்ளார்.
42 வது Toronto சர்வதேச திரைப்படபட விழாவில் திரையிடபட்டு பெரும் வரவேற்பு பெற்ற படமிது என்பது குறிப்பிடத்தக்கது!